முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கு மோடிக்கு முக்கிய சாட்சி கடிதம்


முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கு மோடிக்கு முக்கிய சாட்சி கடிதம்
x
தினத்தந்தி 25 Dec 2016 9:02 PM GMT (Updated: 25 Dec 2016 9:02 PM GMT)

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், ‘சென்னை தடா கோர்ட்டு உத்தரவிட்டபடி, ராஜீவ் கொலையின் சதி பற்றி சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு குழுவோ, பலதுறை கண்காணிப்பு முகமையோ விசாரணை நடத்தவில்லை’ என கூறி சுப்ரீம் கோர்ட்டில் மனு தா

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், ‘சென்னை தடா கோர்ட்டு உத்தரவிட்டபடி, ராஜீவ் கொலையின் சதி பற்றி சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு குழுவோ, பலதுறை கண்காணிப்பு முகமையோ விசாரணை நடத்தவில்லை’ என கூறி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவின்மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், சி.பி.ஐ.க்கும் நோட்டீஸ் அனுப்புமாறு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 14–ந்தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலையின் பின்னணி குறித்து விசாரித்து அறிய அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் முன்னிலையில் ஆஜரான முக்கிய சாட்சியான, ரமேஷ் தலால் என்பவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர், ‘‘நான் ஏப்ரல் 19–ந்தேதி தேதியிட்டு எழுதிய கடிதத்தின் உள்ளடக்கத்தினை கருத்தில் கொண்டு, சி.பி.ஐ., ஒரு கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய காத்திருக்கிறது. இதில், சி.பி.ஐ. பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு கோரி உள்ளது. இந்த வழக்கில் தர்க்கரீதியிலான முடிவு ஏற்படும் வகையில், விசாரணை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதில், நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்’’என கூறி உள்ளார்.

ரமேஷ் தலால், ஏப்ரல் 19–ந்தேதி மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மகிரிஷிக்கும், சி.பி.ஐ. இயக்குனர் அனில் சின்காவுக்கும் ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் சில குறிப்பிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டியதுடன், அதன் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.


Next Story