குஜராத்தில் ரூ.26 லட்சம் மதிப்பளவில் போலி 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்


குஜராத்தில் ரூ.26 லட்சம் மதிப்பளவில் போலி 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 26 Dec 2016 7:39 AM GMT (Updated: 26 Dec 2016 7:38 AM GMT)

உயர் மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த பின்னர் கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையை அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் லட்சக்கணக்கில் புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் கணக்கில் வெளிவராத சொத்துக்கள் சிக்கி வருகிறது. இதற்கிடையே ஒரு கும்பல் கள்ளநோட்டுகளை அடிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது, இதுபோன்ற கூட்டமும் மத்திய பாதுகாப்பு முகமைகள் வலையில் சிக்கி வருகிறது.

ஆமதாபாத்,

குஜராத்தில் ரூ. 26 லட்சம் மதிப்பளவில் போலி 2000 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த பின்னர் கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையை அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் லட்சக்கணக்கில் புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் கணக்கில் வெளிவராத சொத்துக்கள் சிக்கி வருகிறது. இதற்கிடையே ஒரு கும்பல் கள்ளநோட்டுகளை அடிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது, இதுபோன்ற கூட்டமும் மத்திய பாதுகாப்பு முகமைகள் வலையில் சிக்கி வருகிறது.

இதற்கிடையே புதிய 2000 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து பொதுமக்களை ஏமாற்றும் சம்பவமும் நடைபெற்று வருகிறது.

இப்போது குஜராத் மாநிலத்தில் ரூ. 26 லட்சம் மதிப்பளவில் போலி 2000 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். ராஜ்கோட்டில் இருவரை ரூ. 26 லட்சம் மதிப்பளவில் போலி 2000 ரூபாய் நோட்டுகளுடன் போலீசார் கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் அவர்களுக்கு எப்படி போலி ரூபாய் நோட்டுகள் கிடைத்தது என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story