ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக தொழிலாளர் நலத்துறையின் துணை தலைமை ஆணையர் கைது:சிபிஐ நடவடிக்கை


ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக தொழிலாளர் நலத்துறையின் துணை தலைமை ஆணையர் கைது:சிபிஐ நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Dec 2016 1:03 PM GMT (Updated: 26 Dec 2016 1:03 PM GMT)

ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக தொழிலாளர் நலத்துறையின் துணை தலைமை ஆணையர் சிபிஐ அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐதராபாத்,

ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக தொழிலாளர் நலத்துறையின் துணை தலைமை ஆணையர் சிபிஐ அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் பெருகி வரும் கருப்பு பணத்தை முடக்கும் வகையில் மக்களிடையே புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ந் தேதி அறிவித்தது.

இதையடுத்து, கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர்,மற்றும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி, கட்டுக்கட்டாக பணத்தை கைப்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் தொழிலாளர் நலத்துறையின் துணை தலைமை ஆணையராக பணியாற்றி வருகிறார் ஸ்ரீவத்சவா, இவர் ஐதராபாத் தொழிலாளர் நலத்துறையின் துணை தலைமை ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். இவர் ஒரு பணியை முடித்து கொடுக்க ரூ.25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து சிபிஐ லஞ்ச தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவல் கிடைத்தனின் பேரில் ஸ்ரீவஸ்தவா ரூ.25 ஆயிரம் லஞ்சமாக பெற்றுக்கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

தொழிலாளர் நலத்துறையின் துணை தலைமை ஆணையர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story