பாகிஸ்தான் விடுதலை செய்த இந்திய மீனவர்கள் வாகா எல்லை வந்தனர்


பாகிஸ்தான் விடுதலை செய்த இந்திய மீனவர்கள் வாகா எல்லை வந்தனர்
x
தினத்தந்தி 26 Dec 2016 3:07 PM GMT (Updated: 2016-12-26T20:36:55+05:30)

பாகிஸ்தான் அத்துமீறி கைது செய்த இந்திய மீனவர்களை நேற்று விடுவித்தது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்று வாகா எல்லை வந்து சேர்ந்தனர்.

வாகா,

பாகிஸ்தான் கடல் பகுதியில் அத்துமீறி புகுந்து மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அவ்வப்போது கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. 

இந்த நிலையில் நல்லெண்ண அடிப்படையில் நேற்று 220 இந்திய மீனவர்களை விடுதலை செய்வ தாக பாகிஸ்தான் அறிவித்தது.
பாகிஸ்தானில் உள்ள மாலிர் ஜெயிலில் இந்திய மீனவர்கள் 439 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 220 மீனவர்களை பாகிஸ்தான் நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்று மாலை வாகா எல்லை வந்து சேர்ந்தனர். அவர்களை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர். 

கடந்த செப்டம்பர் மாதம் இந்திய எல்லைக்குள் புகுந்து உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு பின்னர் இருநாடுகளுக்கு இடையே உறவு பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் இந்திய மீனவர்களை விடுவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story