50 நாள் அவகாசத்துக்கு பிறகும் நிலைமை மேம்படாவிட்டால் மோடி ராஜினாமா செய்வாரா? மம்தா பானர்ஜி கேள்வி

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுடன் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘‘உயர் மதிப்பிலான பழைய ரூ
புதுடெல்லி,
மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுடன் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘‘உயர் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் மிகப் பெரிய ஊழல் நடந்து உள்ளது. இதனால் நாட்டின் வங்கி அமைப்பு முறையே சீர்குலைந்துபோய்விட்டது. வேலைவாய்ப்பு இல்லை. விவசாயிகள், சிறுவணிகர்கள், தொழிலாளர்கள், சாதாரண மக்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்’’ என்று மோடி மீது குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து மம்தா பானர்ஜி கூறும்போது, ‘‘பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் 50 நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என்றும் பிரதமர் மோடி கூறினார். அவருடைய காலக்கெடு முடிய இன்னும் 3 நாட்களே இருக்கிறது. அவர் உறுதியளித்தவாறு இந்த அவகாசத்துக்கு பிறகும் நிலைமை மேம்படாவிட்டால் அதற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்வாரா? என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்’’ என்று கேள்வி எழுப்பினார்.