கொச்சி, திருவனந்தபுரம் விமான நிலைய பெயரிலான இணையதளங்களை ஹேக் செய்த பாகிஸ்தான்


கொச்சி, திருவனந்தபுரம் விமான நிலைய பெயரிலான இணையதளங்களை ஹேக் செய்த பாகிஸ்தான்
x
தினத்தந்தி 28 Dec 2016 6:02 AM GMT (Updated: 2016-12-28T11:32:48+05:30)

கேரள மாநிலம் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களின் பெயரில் உள்ள இணையதளத்தை பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர்.

கொச்சி

கேரள மாநிலம் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களின் பெயரில் தனிநபர்களால் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் இதனை  ஹேக் செய்தனர். இணையதளத்தை ஹேக் செய்தது காஷ்மீரி சிறுத்தைகள் என்று அந்த பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எலும்புக்கூட்டின் மண்டை ஓட்டின் புகைப்படமும் அவற்றில் வைக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் கொச்சி விமான நிலையம் பெயரிலான இணையதளம் சீரமைக்கப்பட்டது. பாகிஸ்தானிய ஹேக்கர்கள் இந்திய விமான நிலைய இணையதளங்களை ஹேக் செய்து இது புதிது அன்று.

Next Story