பணம் எடுக்க கட்டுப்பாடுகள்: மத்திய அரசு மீது மம்தா பானர்ஜி பாய்ச்சல்


பணம் எடுக்க கட்டுப்பாடுகள்: மத்திய அரசு மீது மம்தா பானர்ஜி பாய்ச்சல்
x
தினத்தந்தி 31 Dec 2016 10:01 AM GMT (Updated: 2016-12-31T15:31:14+05:30)

பணம் எடுக்க இன்னும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதற்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கொல்கத்தா,

பணம் எடுக்க இன்னும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதற்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய அரசின் பண மதிப்பு நடவடிக்கையை ஆரம்பம் முதலே  கடுமையாக விமர்சித்து வரும் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “ மோடி அவர்களே, பொதுமக்கள் பிச்சைக்காரர்கள் அல்ல. பணம் எடுக்க கட்டுப்பாடுகள் ஏன் இன்னும் நீடிக்கிறது?50 நாட்கள் முடிந்துவிட்டது. மக்கள் கடினமாக சேர்த்து வைத்த  பணத்தை எடுக்கும் உரிமையை  நீங்கள் எப்படி தட்டிப்பறிக்க முடியும்? மக்களின் பொருளாதார உரிமையை அரசு வெறுமனே பறித்துக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஏ.டி.எம்களில் நாள் ஒன்றுக்கு ஒரு வங்கி கணக்கு மூலம் ரூ. 4,500 வரை பணம் எடுத்துக்க்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி நேற்று அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் வாரத்திற்கு 24 ஆயிரம் வரை எடுத்துக்கொள்ளலாம் என்ற முந்தைய அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை. 50 நாட்கள் அறிவித்த கெடும் முடிந்ததால், பணம் எடுக்க மொத்தமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிசர் வங்கி மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டது. 

Next Story