டெல்லி போலீசில் 15 ஆயிரம் பேரை சேர்ப்பதற்கான ஒப்புதலுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி: ராஜ்நாத் சிங் பேச்சு

டெல்லி போலீசில் 15 ஆயிரம் பேரை சேர்ப்பதற்கான ஒப்புதலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கூறியுள்ளார்.
புதுடெல்லி,

இந்த விரிவாக்கம் நடைமுறைக்கு வந்தபின் டெல்லி போலீசாரின் எண்ணிக்கை 1 லட்சம் ஆக இருக்கும்.
புதுடெல்லியில் காவல் துறை அதிகாரிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி பெரிய அளவில் நடந்தது. இதில் 24 அதிகாரிகளுக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி போலீசாரின் எண்ணிக்கை போதிய அளவில் இல்லை என நான் கருதுகிறேன். அது அதிகரிக்கப்பட வேண்டும்.
15 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த வேண்டும் என்ற ஒப்புதல் உள்துறை அமைச்சகத்தினால் அனுமதி அளிக்கப்பட்டு நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதற்கான ஒப்புதல் மிக விரைவில் கிடைத்து விடும் என நான் நம்புகிறேன் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில், இணை மந்திரி கிரண் ரிஜிஜூ, ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் மற்றும் டெல்லி காவல் ஆணையாளர் அலோக் வர்மா மற்றும் மூத்த அதிகாரிகள், ஆய்வாளர்கள், கான்ஸ்டபிள்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story