கர்ப்பிணிப்பெண்கள்,சிறு குறு வியபாரிகள்,மூத்த குடிமக்களுக்கு சலுகைகள்:பிரதமர் மோடி அறிவிப்பு

கர்ப்பிணிப்பெண்கள்,சிறு குறு வியபாரிகள்,மூத்த குடிமக்களுக்கு சலுகைகள்:பிரதமர் மோடி அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Dec 2016 4:01 PM GMT (Updated: 2016-12-31T21:31:43+05:30)

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று டிவியில் உரை நிகழ்த்தினார். அதில், பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றார். அதில் விவசாயிகள், கிராம மக்கள், கர்ப்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள், சிறு, குறு வணிகர்கள் ஆகியோருக்கான திட்டங்களை பிரதமர் அறிவித்தார்.

புதுடெல்லி,

இதுதொடர்பாக, அவர் பேசியதாவது:

சிறு குறு வியபாரிகள்

# சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத தொகை ரூ.1 கோடியிலிருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்படும்.

# சிறு, குறு தொழில்களுக்கான ரொக்க கடன் வரம்பு 20%லிருந்து 25%ஆக உயர்த்தப்படுகிறது.

கர்ப்பிணி பெண்கள்

# கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6000 உதவித்தொகை மத்திய அரசு வழங்கும்.

மூத்த குடிமக்கள்

# மூத்த குடிமக்களின் முதலீட்டிற்கு ரூ.10 லட்சம் வரை 8% வட்டி வழங்கப்படும்.

# மின்னணு பரிவர்த்தனையை எளிதாக்க பீம் செயலியை அதிகம் பயன்படுத்துங்கள்.

# நாடு முழுவதும் பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story