தமிழகத்துக்கு புயல் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் -அ.தி.மு.க. எம்.பி மைத்ரேயன்

டெல்லி மேல்-சபையில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினரான மைத்ரேயன் தமிழகத்துக்கு புயல் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
புதுடெல்லி
டெல்லி மேல்-சபையில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினரான மைத்ரேயன் , ’தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் வீசிய புயல் மற்றும் மழையால் பேரழிவு ஏற்பட்டது. ஆனால் இதுவரை தமிழகத்துக்கு மத்திய அரசு புயல் நிவாரண நிதியை வழங்கவில்லை. இந்த நிவாரணப்பணிகளுக்காக ரூ.22 ஆயிரம் கோடி தேவை என மாநில அரசு கேட்டுள்ளது’ என்றார்.
அவரது கோரிக்கைக்கு ஆதரவு அளித்து பேசிய விஜிலா சத்யானந்த், தமிழகத்தில் புயல் நிவாரண பணிகளுக்காக ரூ.5000 கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Next Story