இளம்பெண்ணின் நுரையீரலில் 9 ஆண்டுகளாக சிக்கியிருந்த பேனாவை மருத்துவர்கள் அகற்றினர்.


இளம்பெண்ணின் நுரையீரலில் 9 ஆண்டுகளாக சிக்கியிருந்த பேனாவை மருத்துவர்கள் அகற்றினர்.
x
தினத்தந்தி 31 March 2017 9:27 AM GMT (Updated: 2017-03-31T14:57:40+05:30)

பெங்களூருவில் இளம்பெண் ஒருவரின் நுரையீரலில் 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த பேனாவை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ரேணுகா (19) , மிகவும் துர்நாற்றம் வீசும் வகையில், தனக்கு அடிக்கடி சளித்தொல்லை, இருமல் ஏற்படுவதாகக் கூறி, அங்குள்ள ராஜீவ் காந்தி மார்பக நோய் சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நுரையீரலில் பேனா ஒன்றின் பாகங்கள் சிதைந்த நிலையில் உள்ளதை கண்டுபிடித்தனர்.

நீண்ட நாட்களாக இந்த பேனா நுரையீரலில் தங்கியதால் உள்ளுறுப்புகள் மிகவும் சிதைந்துபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த பெண், சளித்தொல்லை, இருமலால் அடிக்கடி பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக, சளி வெளியேறும்போது கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து, அவருக்கு சிறப்பான முறையில் நேர்த்தியாக, அறுவை சிகிச்சை செய்து, அந்த பேனாவை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். இது, தென்னிந்திய மருத்துவ வரலாற்றில் முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது.

தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருந்துவரும் அவர், கூடிய விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்புவார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Next Story