ஓட்டுப்பதிவு எந்திரங்களில் மோசடிக்கு வாய்ப்பு இல்லை விரைவில் அனைத்து கட்சி கூட்டம் நசீம் ஜைதி தகவல்


ஓட்டுப்பதிவு எந்திரங்களில் மோசடிக்கு வாய்ப்பு இல்லை விரைவில் அனைத்து கட்சி கூட்டம் நசீம் ஜைதி தகவல்
x
தினத்தந்தி 29 April 2017 3:42 PM GMT (Updated: 2017-04-29T21:12:28+05:30)

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் மோசடிக்கு வாய்ப்பு இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி செய்தியார்களிடம் கூறியதாவது:

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்தவித மோசடிக்கும் வாய்ப்பு இல்லை என்பதை நிரூபிக்க விரைவில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டம் நடைபெற உள்ளது.  2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்க்குள் யாருக்கு வாக்களித்தோம் என வாக்காளர்கள் ரசீது பெறும் வெளிப்படைத் தன்மை நடைமுறைக்கு வரும். வரும் 2018-ம் ஆண்டு செப்டம்பரில் 15 லட்சம் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் தயாராக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story