டெல்லியில் எதிர்பாராதவிதமாக காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி உயிரிழப்பு

டெல்லி ராணிபாக்கில் காருக்குள் ஏறிய சிறுவன் எதிர்பாராத விதமாக உள்ளே சிக்கி மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,
டெல்லி ராணிபாக் பகுதியை சேர்ந்த சிறுவன் (வயது 6) சோனுவை காலை 11 மணியளவில் இருந்து காணவில்லை என உறவினர்கள் தேடிஉள்ளனர். மாலை வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த காருக்குள் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீஸ் தெரிவித்து உள்ள தகவலில், வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் ஏறிஉள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக உள்ளே சிக்கிக் கொண்டான். அவனால் வெளியே வரமுடியவில்லை.
சிறுவன் மூச்சு திணறல் மற்றும் வெயில் காரணமாக தீ காயம் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டான் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாலை 4 மணியளவில் காரின் உரிமையாளர் சென்று பார்த்தபோது, சிறுவன் உள்ளே மயங்கிய நிலையில் காணப்பட்டு உள்ளான். உடனடியாக அவர் போலீசிடம் தகவல் தெரிவித்து உள்ளார். சிறுவனை மருத்துவமனைக்கு எடுத்து சென்று உள்ளனர். ஆனால் சிறுவன் உயிரிழந்துவிட்டான் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. கார் உரிமையாளர் கதவுகளை மூடாமல் சென்று உள்ளார். சிறுவன் விளையாடியபோது உள்ளே சென்று உள்ளான்.
Related Tags :
Next Story