வெயில் தாங்க முடியாமல் காருக்குள் பாய்ந்த குதிரை காயம்


வெயில் தாங்க முடியாமல் காருக்குள் பாய்ந்த குதிரை காயம்
x
தினத்தந்தி 6 Jun 2017 9:03 AM GMT (Updated: 6 Jun 2017 9:03 AM GMT)

ராஜஸ்தான் மாநிலத்தில் வெயில் தாங்க முடியாமல் சாலையில் தறிகெட்டு ஓடிய குதிரை காருக்குள் பாய்ந்துள்ளது.

ஜெய்ப்பூர் நகரில் நேற்று 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது, இந்நிலையில் சாலையில் கட்டிவைக்கப்பட்டிருந்த குதிரை ஒன்று வெயிலின் தாக்கத்தை தாங்கி கொள்ள முடியாமல் சாலையில் தறிகெட்டு ஓடியுள்ளது.

அப்போது, எதிரே வந்த காரின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்ததில், காரை ஓட்டி வந்த நபருக்கும், குதிரைக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து பொதுமக்களும், வனத்துறையினரும் கார் ஓட்டுநரையும், குதிரையையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

Next Story