உத்தர பிரதேசத்தில் தொடரும் அதிரடி திட்டங்கள்:10-வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு தலா ரூ.10,000 பரிசு


உத்தர பிரதேசத்தில் தொடரும் அதிரடி திட்டங்கள்:10-வகுப்பு தேர்ச்சி பெறும்  மாணவிகளுக்கு தலா ரூ.10,000 பரிசு
x
தினத்தந்தி 6 Jun 2017 2:18 PM GMT (Updated: 6 Jun 2017 3:01 PM GMT)

உத்தரபிரதேசத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு தலா ரூ. 10,000 பரிசு தொகையாக வழங்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு கல்வியை மேம்படுத்தும் முயற்சியில் யோகி ஆதித்யநாத் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறும் ஒவ்வொரு மாணவிகளுக்கு பரிசு தொகையாக தலா ரூ.10,000 வழங்கப்படும் என்று அம்மாநில துணை முதல்-மந்திரி தினேஷ் ஷர்மா இந்த அறிவிப்பை வெளியிட்டார். கன்யா வித்யா தன் யோஜனா (KVDY) முறையின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுபான்மையினருக்கும் உதவி செய்யும் வகையில் ஏழை முஸ்லிம் பெண்களின் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க யோகி அரசு முன்வந்துள்ளது.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திலும் சிறுபான்மையினர் சேர்த்துள்ளதாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மோகினி ராசா தெரிவித்துள்ளார். யோகி ஆதித்யநாத்தின் 45-வது பிறந்தநாளையொட்டி 100,000 பெண்களை கவுரவிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story