மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு


மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு
x
தினத்தந்தி 7 Jun 2017 6:55 AM GMT (Updated: 7 Jun 2017 6:55 AM GMT)

மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது என்ற உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு தமிழ்நாடு, கேரளா,  மேற்கு வங்காளம், பீகார்,புதுவை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. மாட்டிறைச்சி மீதான தடையை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஹைதராபாத்தை தலைமையகமாகக்கொண்டு இயங்கும் அமைப்பு ஒன்று, இறைச்சி தடைஉத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை, உச்சநீதிமன்றம் ஜூன் 15 ஆம் தேதி விசாரிக்க உள்ளது. இறைச்சி தடை விவகாரத்தில் இவ்வழக்கின் தீர்ப்பு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story