பீகாரில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் திடீர் போராட்டம்


பீகாரில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2017 12:26 PM GMT (Updated: 8 Jun 2017 12:29 PM GMT)

பீகாரில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாட்னா,

பீகாரில் கடந்த மாதம் இறுதியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வாக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில்  தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 64 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்தனர். அதிலும் 70 சதவீத அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களும், 76 சதவீதம் கலை பாடப்பிரிவு மாணவர்களும் தோல்வியடைந்தனர். மொத்தம் 30.11 சதவீதம் அறிவியல் மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சராசரியாக 44.66 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளனர். ஆனால் காமர்ஸ் பாடத்தில் 73.76 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதனால் பீகாரில் கல்வித்தரம் கேள்விக்குறியானது.

இந்நிலையில் தேர்வில் தோல்வி அடைந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் தோல்வி அடைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிராக இடது சாரி கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரா, பாட்னா, வைஷாலி, பெகுசராய், ஜெஹானாபாத் மற்றும் கயா மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வித்துறைக்கு எதிராக கையில் பேனர்களை வைத்து எதிராக கோஷமிட்டனர். தேசியம் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 

12-ம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்கள் மறுமதிப்பீடுக்கும், கேள்விதாளை சரிபார்க்கவும், ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story