ஜம்மு காஷ்மீர்:உரி பகுதியில் மேலும் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீர்:உரி பகுதியில் மேலும் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 9 Jun 2017 2:41 PM GMT (Updated: 9 Jun 2017 2:41 PM GMT)

ஜம்மு-காஷ்மீர் உரி பகுதியில் மேலும் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர்,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பயங்கரவாதிகள், பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்து வருகிறார்கள். இந்திய ராணுவம் அவர்களுடைய முயற்சியை வெற்றிகரமாக முறியடித்து வருகிறது.

இந்நிலையில் ஜஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் மேலும் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இதற்கு முன்னதாக எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உரி செக்டாரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இதன் மூலம் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. எல்லைப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 15 நாட்களில் பாகிஸ்தான் உதவியுடன் 4 முறை இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்து உள்ளனர். அதனை இந்திய ராணுவம் முறியடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story