என் வாழ்க்கை விவசாயிகளுக்காக அர்பணிக்கப்பட்டது-சிவராஜ் சிங் சவுகான் பேச்சு


என் வாழ்க்கை விவசாயிகளுக்காக அர்பணிக்கப்பட்டது-சிவராஜ் சிங் சவுகான் பேச்சு
x
தினத்தந்தி 10 Jun 2017 2:57 PM IST (Updated: 10 Jun 2017 2:57 PM IST)
t-max-icont-min-icon

என் வாழ்க்கை விவசாயிகளுக்காக அர்பணிக்கப்பட்டது என்று உண்ணாவிரத போராட்டத்தில் சிவராஜ் சிங் சவுகான் பேசி உள்ளார்.

போபால்,

மத்தியபிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெறுகிறது. அங்கு விவசாயிகள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியானார்கள். இந்நிலையில், முதல்–மந்திரி சவுகான், காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் அமைதி திரும்புவதற்காக காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தை முதல்-மந்திரி  சிவராஜ் சிங் சவுகான் தொடங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:

மாநிலத்தில் 65 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பி உள்ளனர். அவர்கள் இல்லை என்றால் மாநிலம் வளர்ச்சி பெறாது.  விவசாயிகள் நிலத்தை அவர்களின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசு கையகபடுத்தாது. விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க அரசு ஒரு போதும் தயங்காது. வன்முறை சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர். என் வாழ்க்கை விவசாயிகளுக்காக அர்பணிக்கப்பட்டது.

அவர்களின் நல்வாழ்வே என் வாழ்வின் நோக்கம். மாநிலத்தில் வாகனங்களை எரிக்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து பிரச்சனைகளும் சமாதனமாக பேசி தீர்க்கப்பட வேண்டும். அகிம்சையே காந்தியின் கொள்கை நான் அவரது கொள்கையை பின்பற்ற முடிவு செய்துள்ளேன். விவசாயிகளின் வலியை நான் உணர்கிறேன். இந்த வன்முறை நிறுத்தப்பட வேண்டும். அமைதி திரும்பும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story