மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து முகுல் ரோஹத்கி திடீர் ராஜினாமா


மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து முகுல் ரோஹத்கி திடீர் ராஜினாமா
x
தினத்தந்தி 11 Jun 2017 3:05 PM GMT (Updated: 11 Jun 2017 3:06 PM GMT)

முகுல் ரோஹத்கி பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து முகுல் ரோஹத்கி ராஜினாமா செய்வதாக மத்திய சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி உள்ளார். சமீபத்தில் அவருக்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு வழங்கியது.

இது தொடர்பாக அவர் செய்தியார்களிடம் கூறுகையில்,

தமக்கு பதவி நீட்டிப்பு தேவையில்லை, பதவி நீட்டிப்பு செய்ய நான் விரும்ப வில்லை என அவர் கூறி உள்ளார்.

குஜராத் அரசுக்காக 2002-ம் ஆண்டு குஜராத் கலவர வழக்கு, போலி என்கவுண்ட்டர் வழக்கு ஆகியவற்றை நடத்தியவர். மேலும், முகேஷ் மற்றும் அனில் அம்பானி சகோதரர்களுக்கு இடையேயான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்தபோது ரோஹத்கி, அனில் அம்பானிக்காக வாதாடி இருக்கிறார்.

2012-ம் ஆண்டு கேரள கடற்கரையில் இத்தாலிய மாலுமிகள் இந்திய மீனவர்கள் 2 பேரை சுட்டுக்கொன்ற வழக்கில் இத்தாலிய தூதரகத்திற்காகவும், 2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக கார்பரேட் நிறுவனங்களுக்காகவும் சுப்ரீம் கோர்ட்டில் முகுல் ரோஹத்கி ஆஜராகி இருக்கிறார்.

மத்திய அரசின் 14-வது அட்டர்னி ஜெனரலாக சுப்ரீம் கோர்ட்டின்  வக்கீல் முகுல் ரோஹத்கி பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story