எல்லைப் பாதுகாப்பு படை கூட்டத்தில் ஆபாசப்படத்தை காட்சிப்படுத்திய அதிகாரி, விசாரணைக்கு உத்தரவு

எல்லைப் பாதுகாப்பு படை கூட்டத்தில் ஆபாசப்பட கிளிப்பை அதிகாரி காட்சிப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பெரோஸிப்பூர்,
பெரோஸிப்பூர் ராணுவ பயிற்சி முகாமில் பயிற்சி வழங்கிய ராணுவ அதிகாரி ஆபாசப்படை கிளிப்பை காட்சிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது எல்லைப் பாதுகாப்பு படைக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 77-வது பாட்டலியன் படை பிரிவின் தலைமையகத்தில் அதிகாரி விளக்கக்காட்சிகளை லேப்டாப் மூலமாக காட்டிஉள்ளார். ஆனால் அப்போது ஆபாசபடம் ஓடியதாக தெரிகிறது. சுமார் 90 செகண்ட்கள் அப்படம் ஓடியதாக கூறப்படுகிறது.
எல்லைப் பாதுகாப்பு படை டிஐஜி ஆர். எஸ். காதாரியா பேசுகையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது, விசாரணையில்தான் உண்மை தெரியவரும் என்றார்.
எல்லைப் பாதுகாப்பு படையின் ஒழுக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கையை சகித்துக் கொள்ள முடியாது என கூறிஉள்ளார்.
Related Tags :
Next Story