மும்பையில் கன மழை ரோடு வெள்ளத்தில் பெரிய மீன் பிடித்தவர்


மும்பையில் கன மழை ரோடு வெள்ளத்தில் பெரிய மீன் பிடித்தவர்
x
தினத்தந்தி 13 Jun 2017 10:47 AM GMT (Updated: 13 Jun 2017 10:47 AM GMT)

மும்பையில் கடந்த் 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதில் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரிய மீன் ஒன்றை ஒருவர் பிடித்து உள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் வறுத்தெடுத்த கோடை வெயிலுக்கு விடைகொடுத்து, அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் மாநில தலைநகர் மும்பையில் பரவலாக நல்ல மழை பெய்தது. இரவும் மும்பை மற்றும் தானே, நவிமும்பை உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கி நின்றது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், தாராவி தோபிகாட் பகுதியில் உள்ள குடிசை வீடுகளிலும் மழைநீர் புகுந்தது.

தேஜாஸ் மேத்தா,என்பவர் தனது பேஸ்புக்  பக்கத்தில் புகைப்படங்களை காந்திவலி கிழக்கில் உள்ள தாக்கூர் கிராமத்தில் வீதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பெரிய மீன் ஒன்றை பிடித்து உள்ளார்.

Next Story