டெல்லியில் கனமழை


டெல்லியில் கனமழை
x
தினத்தந்தி 2 July 2017 4:30 AM IST (Updated: 2 July 2017 12:46 AM IST)
t-max-icont-min-icon

தலைநகர் டெல்லியில் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வெயில் வாட்டி வதைத்தது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதி அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் திடீரென மழை பெய்தது. அதனை தொடர்ந்து அங்கு தினந்தோறும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

நேற்றும் அங்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. அக்னியின் கோரப்பிடியில் சிக்கித்தவித்த மக்கள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story