17 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து என்னை வேட்பாளராக தேர்வு செய்தது பெருமைக்குரியது மீராகுமார்


17 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து என்னை வேட்பாளராக தேர்வு செய்தது பெருமைக்குரியது மீராகுமார்
x
தினத்தந்தி 2 July 2017 1:34 PM IST (Updated: 2 July 2017 1:34 PM IST)
t-max-icont-min-icon

17 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து என்னை வேட்பாளராக தேர்வு செய்தது பெருமைக்குரியது என மீரா குமார் கூறிஉள்ளார்.


சென்னை,

ஜனாதிபதி தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமார் போட்டியிடுகிறார். இரு வேட்பாளர்களும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகின்றனர். சென்னைக்கு நேற்று வந்த காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமார் தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

 சென்னையில் தங்கிய அவர் கார் மூலம் இன்று காலை புதுவை சென்றார். புதுவை அக்கார்டு ஓட்டலுக்கு வந்த அவரை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் வரவேற்றனர்.  அக்கார்டு ஓட்டலில் உள்ள கருத்தரங்கு அறையில் காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை மீராகுமார் சந்தித்து ஆதரவு திரட்டினார். மீராகுமார் காங்கிரஸ் வேட்பாளரான தன்னை ஆதரிக்கும்படி காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் கேட்டுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீரா குமார், 17 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து என்னை வேட்பாளராக தேர்வு செய்தது பெருமைக்குரியது. அனைத்து எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் எனக்கு வாக்களிக்க வேண்டும். 

ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள எனக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார் என்றார். 


Next Story