பா.ஜனதா தலைவர்கள் மேல் நடவடிக்கை எடுத்த உத்தரபிரதேச பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்


பா.ஜனதா தலைவர்கள் மேல் நடவடிக்கை எடுத்த உத்தரபிரதேச பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
x
தினத்தந்தி 3 July 2017 4:15 AM IST (Updated: 3 July 2017 2:35 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகர் மாவட்டத்துக்கு உட்பட்ட சையானாவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் ஷ்ரேஸ்தா தாகூர்.

மீரட்,

 இவர் கடந்த மாதம் 22–ந் தேதி அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற பிரமோத் குமார் என்ற பா.ஜனதா பிரமுகரை தடுத்து நிறுத்தி 200 ரூபாய் அபராதம் விதித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் உள்ளூர் பா.ஜனதா நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்தார். அதன்பேரில் நகர பா.ஜனதா தலைவர் முகேஷ் பரத்வாஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு வந்து, பெண் போலீஸ் அதிகாரி ஷ்ரேஸ்தாவிடம் தகராறில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தன்னை பணி செய்யவிடாமல் தடுத்ததாக 5 பேரை ஷ்ரேஸ்தா கைது செய்தார்.

இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை தங்கள் கவுரவ பிரச்சினையாக எடுத்துக்கொண்ட பா.ஜனதாவினர் இது குறித்து முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் முறையிட்டனர். கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் இது தொடர்பாக முதல்–மந்திரியை சந்தித்து பேசினர்.

இதைத்தொடர்ந்து பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷ்ரேஸ்தாவை பரேக் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் ‘வாகன தணிக்கையில் ஈடுபட போலீசாருக்கு அதிகாரம் இல்லை’ என்று முதல்–மந்திரியிடம் இருந்து எழுத்து மூலம் உத்தரவு பெற்று வந்தால் மட்டுமே இதை ஏற்றுக்கொள்வேன் என ஷ்ரேஸ்தா கூறியுள்ளார்.


Next Story