காஷ்மீரில் தீவிரவாதி இறுதி சடங்கில் பல ஆயிரம் பேர் திரண்டனர் நாட்டுக்கு எதிராக கோஷம்
காஷ்மீரில் கொல்லபட்ட தீவிரவாதி இறுதி சடங்கில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அவர்கள் நாட்டுக்கு எதிராக கோஷமிட்டனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் ஆங்காங்கே நாசவேலைகளில் ஈடுபடும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக மாநில போலீசாருடன் இணைந்து ராணுவம் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
அங்குள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் டயல்காமுக்கு அருகே பிரெண்டி–பத்போராவில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாநில போலீஸ் அதிரடிப்படையினருடன் இணைந்து, ராணுவமும் அந்த பகுதியை சுற்றி வளைத்தது.
பின்னர் பாதுகாப்பு படையினர் அங்கே தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், கிராம மக்கள் 17 பேரை மனித கேடயமாக பிடித்து வைத்துக் கொண்டு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். உடனே சாதுரியமாக செயல்பட்ட பாதுகாப்பு படையினர், கிராம மக்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
இதைத்தொடர்ந்து அங்கே பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது திருப்பி தாக்குதல் நடத்தினர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இறுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் லஷ்கர்–இ–தொய்பா பயங்கரவாத தளபதியான பஷிர் லஷ்கரி எனவும், மற்றொருவன் பெயர் அபுமாஸ் என்பதும் தெரியவந்தது. இவர்களில் பசிர் லஸ்காரி ஆனந்த்நாக் மாவட்டம் கோகர்நாக் அருகே உள்ள சோயப்சாலி என்ற கிராமத்தை சேர்ந்தவன். இவன் லஸ்கர் இ தொய்பா இயக்கத்தின் தளபதியாக செயல்பட்டு வந்தான். அபுமாஸ் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்று தெரியவந்தது.
பசிர் லஸ்காரியின் இறுதி சடங்கு நிகழ்ச்சி நேற்று அவரது சொந்த கிராமத்தில் நடைபெற்றது. அப்போது பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பேர் இதில் பங்கேற்றனர்.
அப்போது தீவிரவாதிகள் சிலரும் இறுதி சடங்கில் கலந்து கொண்டு பிணம் அருகே துப்பாக்கியால் வலம் வந்து சடங்குகளை செய்தனர். பின்னர் இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போது நாட்டுக்கு எதிராக கோஷமிட்டபடி சென்றனர்.
கடந்த ஆண்டு தீவிரவாதி தளபதி புர்கானிவானி கொல்லப்பட்ட போதும் இதேபோல பல்லாயிரக் கணக்கானோர் இறுதி சடங்கில் கலந்து கொண்ட னர். அதுபோலவே இதிலும் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
தீவிரவாதி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஸ்ரீநகரில் முழுஅடைப்பு போராட்டத் துக்கு பிரிவினை வாத அமைப்புகள் அழைப்பு விடுத்து இருந்தனர். இதனால் ஸ்ரீநகரில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

Related Tags :
Next Story