இஸ்ரேலுடன் பயங்கரவாதம் உள்ளிட்ட சவால்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளேன்: பிரதமர் மோடி
இஸ்ரேலுடன் பயங்கரவாதம் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி நாளை இஸ்ரேல் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்நாயுஹு வுடனான சந்திப்பின் போது பயங்கரவாதம் , பொருளதார உறவுகளை ஊக்கப்படுத்துதல் உள்ளிட்ட பொதுவான சவால்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பில் கலந்து கொள்வதற்கு முன்பாக பிரதமர் மோடி, மூன்று நாட்கள் பயனமாக இஸ்ரேல் செல்கிறார். இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேல் செல்வது இதுதான் முதல் தடவை என்பதால், பிரதமர் மோடியின் இந்த பயணம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜூலை 6 ஆம் தேதி வரை இஸ்ரேலில் பயணம் செய்யும் மோடி, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்நாயுஹுவை சந்தித்து பேசுகிறார். அந்நாட்டு அதிபர் ரியூவன் ருவி ரிவிலினையும் சந்திக்கும் பிரதமர் மோடி, புலம் பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.
அதேபோல், 1918 ஆம் ஆண்டு ஹைபா விடுதலை போரின் போது உயிர்நீத்த இந்திய படை வீரர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவகத்திலும் மரியாதை செலுத்துகிறார். இஸ்ரேல் பயணம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் மோடி கூறியிருப்பதாவது:- நாளை, இஸ்ரேல் பயணம் மேற்கொள்ள உள்ளேன். இந்தியாவின் சிறப்பு வாய்ந்த பங்காளி இஸ்ரேல், முதல் இந்திய பிரதமர் இஸ்ரேல் பயணம் செல்கிறார்.இந்த பயணத்தை நான் மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி உள்ளேன். இருநாட்டு மக்களையும் இந்த பயணம் மேலும் ஒருங்கிணைக்கும்.
இந்தியா-இஸ்ரேல் இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த எனது இஸ்ரேல் பயணம் பெரிதும் உதவும். எனது பயணத்தில் உலகளவில் சவாலாக இருக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பது குறித்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ உள்ளிட்டோருடன் ஆலோசிப்பேன்” என்றார்.
Related Tags :
Next Story