அனைத்து விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை கடந்த ஆண்டு ஜூன் 28–ந் தேதி அரசாணை வெளியிட்டது.
புதுடெல்லி,
தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது என்று தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில், ஏற்கனவே ரூ.5,780 கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை தீர்ப்பின்படி பெரும் விவசாயிகள் கடனை ரத்து செய்ய வேண்டும் என்றால், தமிழக அரசுக்கு மேலும் ரூ.1,980 கோடி செலவு ஆகும்.
எனவே, சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை, இது தொடர்பாக பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணிய பிரசாத் மற்றும் அரசு வக்கீல் பி.பாலாஜி ஆகியோர் ஆஜர் ஆனார்கள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வக்கீல் என்.ராஜாராமன் ஆஜர் ஆனார்.
விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்புக்கு இடைக் கால தடை விதிப்பதாக அறிவித்தனர். மேலும், பதில் மனு தாக்கல் செய்யுமாறு கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.