புதிய தலைமைத்தேர்தல் ஆணையராக அச்சல்குமார் ஜோதி நாளை மறுநாள் பதவியேற்கிறார்


புதிய தலைமைத்தேர்தல் ஆணையராக அச்சல்குமார் ஜோதி நாளை மறுநாள் பதவியேற்கிறார்
x
தினத்தந்தி 4 July 2017 5:20 PM IST (Updated: 4 July 2017 5:20 PM IST)
t-max-icont-min-icon

புதிய தலைமைத்தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அச்சல்குமார் ஜோதி வியாழக்கிழமை பதவியேற்கிறார்

புதுடெல்லி, 

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் சைதி வரும் 6-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து மத்திய சட்ட அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. இதில் ஆலோசனையில் குஜராத் முன்னாள் தலைமை செயலாளர் ஆச்சல் குமார் ஜோதியை புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்க பரிந்துரை செய்தது. இதற்கு குடியரசு தலைவரும் ஓப்புதல் அளித்தார்.

இந்தநிலையில் புதிய தேர்தல் ஆணையராக குஜராத் முன்னாள் தலைமை செயலாளர் ஆச்சல் குமார் ஜோதி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் ஜுலை 6 -ம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான உத்தரவை சட்டத்துறை வெளியிட்டுள்ளது. இவர் மூன்று வருடங்கள் பதவி வகிப்பார். அச்சல் குமார் ஜோதி குஜராத் முன்னாள் தலைமை செயலாளரராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக 1975-ல் பணிக்கு வந்தவர் ஆவார்.  தலைமை தேர்தல் ஆணையர் பொறுப்பில் 2018 ஜனவரி 17 ஆம் தேதி வரை அச்சல் குமார்ஜோதி இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story