சுதந்திரமான கப்பல் போக்குவரத்து பிராந்திய நிலைப்புத்தன்மைக்கு அவசியம் - இந்தியா


சுதந்திரமான கப்பல் போக்குவரத்து பிராந்திய நிலைப்புத்தன்மைக்கு அவசியம் - இந்தியா
x
தினத்தந்தி 5 July 2017 3:36 AM IST (Updated: 5 July 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

சீனா தனது அண்டை கடல் பிரதேசமான தென் சீனக் கடல் பிராந்தியத்தில் தனது ராணுவ வலிமையை காட்டி வருவதை மறைமுகமாக இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

புதுடெல்லி

’ஏசியன்’ கூட்டமைப்பு நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தக பரிமாற்றத்தை வளர்க்கும் விதமான கருத்தரங்கில் பேசும்போது வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்தியாவும் ஏசியன் நாடுகளும் பாரம்பரிய மற்றும் நவீன பாதுகாப்பு சவால்களை சந்தித்து வருகின்றன. இதை சந்திக்க அவை பல்வேறு நடவடிக்கைகளை, இரு நாட்டு உறவுகள், ஏசியன் போன்ற அமைப்புகளின் மூலமாகவும் பிராந்தியத்தின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் இணைந்து பணியாற்றி வருகின்றன என்றார்.

சுதந்திரமான கப்பல் போக்குவரத்தும், அதற்கு உத்தரவாதமளிக்கும் ஐநாவின் கடல்சார் பன்னாட்டு ஒப்பந்தங்களும் இச்சூழலுக்கும் முக்கியமானது என்று சுஷ்மா குறிப்பிட்டார்.

சீனா அப்பிரதேசத்தில் அமெரிக்கா தனது கப்பலை செலுத்தியத்திற்கு பதிலடியாக விமானப்படையையும், கப்பல் படையையும் அனுப்புவது குறித்து மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏசியன் நாடுகளுடன் இந்தியாவிற்கு இருக்கும் பாரம்பரியமான உறவுக்குறித்து குறிப்பிட்ட அவர் தென் சீனக்கடல் பிரதேசத்தில் அமைதி நிலவுவதன் மூலம் அதன் மூலமான பொருளாதாரப் பலன்களை அனைவரும் பெறமுடியும் என்றார். ஏசியன் நாடுகள் இந்தியாவின் ’கிழக்கை நோக்கும்’ கொள்கையின் இதயமாக இருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

இக்கருத்தரங்கில் ப்ரூனி, கம்போடியா, லாவோஸ், சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனேஷியா, மியான்மார் மற்றும் தாய்லாந்து நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 


Next Story