பஸ்சில் பெண்ணிற்கு வலுகட்டாயமாக முத்தம் கொடுத்த பா.ஜனதா தலைவர் கற்பழிப்பு வழக்கில் கைது


பஸ்சில் பெண்ணிற்கு வலுகட்டாயமாக முத்தம் கொடுத்த பா.ஜனதா தலைவர் கற்பழிப்பு வழக்கில் கைது
x
தினத்தந்தி 5 July 2017 1:51 PM IST (Updated: 5 July 2017 1:51 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் ஓடும் பஸ்சில் பெண் பயணிக்கு முத்தமிட்ட பா.ஜனதா தலைவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டார்.


 
மும்பை,
  
மராட்டியத்தில் பா.ஜனதா தலைவர் ரவிந்திர பவண்தாடே கடந்த 27-ம் தேதி பஸ்சில் சென்ற பெண்ணிற்கு முத்தம் கொடுத்து உள்ளார். பெண்  பயணிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தார் என பிற பயணிகள் கூறிஉள்ளனர். பா.ஜனதா தலைவர் செய்த வேலையை அங்கிருந்த பிற பயணிகள் புகைப்படம் எடுத்து உள்ளனர். 

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பஸ்சில் இருந்த சிசிடிவியில் இக்காட்சிகள் பதிவாகி உள்ளது. வீடியோவும் வெளியாகி உள்ளது.

பா.ஜனதா தலைவருக்கு எதிராக கடும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பாக புகார் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து பா.ஜனதா தலைவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ரவிந்திர பவண்தாடே நாக்பூரில் இருந்து கட்ச்ரோலிக்கு சொகுசு பஸ்சில் சென்ற போது இச்சம்பவம் நடந்து உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும், வேலை வாங்கி தருவதாகவும் கூறினார் என போலீசிடம் தெரிவித்து உள்ளார். பா.ஜனதா தலைவர் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார் என தெரியவந்து உள்ளது.

இவ்விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உள்ளூர் பா.ஜனதா தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. 


Next Story