மலையாள சினிமாவில் வாய்ப்பு தேடும் புதுமுக நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கேரள நடிகைகள் கூட்டமைப்பு பரபரப்பு குற்றச்சாட்டு


மலையாள சினிமாவில் வாய்ப்பு தேடும் புதுமுக நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல்  கேரள நடிகைகள் கூட்டமைப்பு பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 July 2017 2:55 AM IST (Updated: 6 July 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

மலையாள சினிமாவில் வாய்ப்பு தேடும் புதுமுக நடிகைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்று கேரள நடிகைகள் கூட்டமைப்பு பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளது. நடிகை பாவனா கடத்தல் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவ

திருவனந்தபுரம்,

மலையாள சினிமாவில் வாய்ப்பு தேடும் புதுமுக நடிகைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்று கேரள நடிகைகள் கூட்டமைப்பு பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளது.

நடிகை பாவனா கடத்தல்

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கேரள நடிகர் சங்கத்துக்கும் (அம்மா), கேரள நடிகைகள் கூட்டமைப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் நடைபெற்ற கேரள நடிகர் சங்கத்தின் 23–வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சங்கத்தின் தலைவர் இன்னசென்ட், மலையாள சினிமா உலகம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதில்லை என்றும் கூறி இருந்தார்.

பரபரப்பு தகவல்

இந்த விளக்கத்தை கேரள நடிகைகள் கூட்டமைப்பில் உள்ள நடிகைகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னசென்ட் அளித்த விளக்கத்துக்கு பதில் அளிக்கும் விதத்தில், நடிகைகள் கூட்டமைப்பு சார்பில் முகநூலில் வெளியிடப்பட்டுள்ள பரபரப்பு தகவல் வருமாறு:–

நடிகர் சங்கத் தலைவர் இன்னசென்ட் முற்றிலும் தவறான தகவலை தெரிவித்து உள்ளார். ஆதிக்கம் படைத்தவர்களின் அதிகார துஷ்பிரயோகமானது, மலையாள சினிமாவிலும் உள்ளது.

பாலியல் துன்புறுத்தல்

இளம்நடிகைகளும், வாய்ப்புகள் தேடி வரும் பல புது முகங்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதை மறுக்க முடியாது.

கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டு விடும் என்றும், கேரள சினிமா துறையில் ஒன்றுமே நடைபெறவில்லை என்று கூறும் இன்னசென்டின் பொய்யான பிரசாரங்களை நம்ப வேண்டாம்.

இவ்வாறு முகநூலில் தகவல் பதிவிடப்பட்டு உள்ளது.

மோதல்

நடிகைகள் கூட்டமைப்பின் இந்த கருத்தால், கேரள சினிமா துறையில் நடிகர்கள் சங்கத்துக்கும், நடிகைகள் கூட்டமைப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.


Next Story