பருவகால மாற்றம்: பாரிஸ் ஒப்பந்தத்தை இந்தியா நிறைவேற்றும் - மோடி
பருவகால மாற்றங்கள் குறித்த செயல்பாட்டில் உலக நாடுகளுக்கு மத்தியில் ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
ஹாம்பர்க்
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து தனது நாடு விலகி விட்டது என்று அறிவித்திருக்கும் சூழலில் மோடியின் பேச்சு குறிப்பிடத்தகுந்தது.
அவ்வாறு உலக நாடுகள் பருவகால மாறுதல் விஷயத்தில் ஒத்துழைப்பு வழங்கும் விஷயத்தில் வளரும் நாடுகளுக்கு வளர்ச்சியடைய போதிய இடம் இருக்க வேண்டும் என்றும் மோடி கூறினார்.
இந்த விஷயத்தில் சர்வதேச அளவில் கூட்டணியாக நாடுகள் செயல்படலாம்; அவை தொழில்நுட்பம், தங்களது திறனையும், அதற்கான அமைப்புக்களையும் ஏற்படுத்திக் கொண்டு இயங்க வேண்டும் என்றார். இச்செயல்பாட்டில் இந்தியா முன்னிலை வகிக்க தயார் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய அரசு எடுத்து வரும் திட்ட முயற்சிகளான திறன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா மற்றும் உள்ளடக்கிய நிதித்திட்டங்கள் ஆகியவை பன்னாட்டு வளர்ச்சி இலக்குகளுக்கு இணையாக இந்தியா எடுத்து வரும் சொந்த நடவடிக்கைகளாகும் என்று சுட்டிக்காட்டினார் மோடி.
பாரிஸ் பருவகால மாற்ற ஒப்பந்தத்தை அமல்படுத்துவது கட்டாயமானது என்று கூறியிருந்த மோடி இந்தியா அதை முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்றார்.
சுற்றுசூழல், தீவிரவாதம் ஆகியபிரச்சினைகளில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகளவில் 190 நாடுகள் ஏற்றிருந்த பாரிஸ் பருவகால மாற்ற ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக சென்ற மாதம் அறிவித்த டிரம்ப் அந்த ஒப்பந்தம் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு நியாயமற்ற வகையில் நன்மையளிப்பதாக் குற்றஞ்சாட்டியிருந்தார். டிரம்பின் முடிவிற்கு உலகம் முழுவதுமிருந்து வணிக குழுக்கள் உட்பட பல பிரிவினரிடமிருந்து கண்டனங்கள் எழுந்தன.
Related Tags :
Next Story