சாய்பாபாவுக்காக 2 கிலோ தங்க பாதுகையை வழங்கிய பெண் பக்தர்

சீரடி சாய்பாபாவுக்காக 2 கிலோ தங்க பாதுகையை பெண் பக்தர் ஒருவர் வழங்கி உள்ளார்.
மும்பை,
சீரடி சாய்பாவா கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
குரு பூர்ணிமாவை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த சந்தியா குப்தா, சீரடி சாய்பாவுக்கு இன்று தங்க பாதுகை வழங்கி உள்ளார்.
இது குறித்து சந்தியா குப்தா கூறியதாவது:
எனது குருவிற்கு என்னால் முடிந்த சிறிய அளவிலான குரு தட்சணை. என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குரு பூர்ணிமா விழாவையொட்டி சீரடியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். சாய்பாபா கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story