தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு விரலில் மை வைப்பதற்காக புதிய பேனா தயாரிப்பு


தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு விரலில் மை வைப்பதற்காக புதிய  பேனா தயாரிப்பு
x
தினத்தந்தி 10 July 2017 2:10 PM IST (Updated: 10 July 2017 2:10 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடக்கும்போது வாக்களித்தவர்களின் விரலில் மை வைப்பதற்காக தேர்தல் ஆணையம் புதிய வகை பேனாவை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலில் ஓட்டு போட்டவர்களை அடையாளம் கண்டு கொள்ளவும் , கள்ள ஓட்டை தடுக்கவும் வாக்காளர்களின் விரலில் அழியாத மை வைக்கும் நடைமுறை உள்ளது. இந்த நிலையில், தேர்தலின் போது வாக்களித்தவர்களின் விரலில் அடையாள மை வைப்பதற்காக தேர்தல் ஆணையம் புதிய வகை பேனாவை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மைசூரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பெயிண்ட் மற்றும் வார்னிஷ் தொழிற்சாலையில் இந்த பேனா தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. புதிய வகை பேனாவின் தயாரிப்புச் செலவு அடையாள மை பாட்டில் தயாரிப்பு செலவைக் காட்டிலும் குறைவே. மேலும் ஒரு பே‌னாவை பயன்படுத்தி ஆயிரம் வாக்காளர்களின் விரல்களில் அடையாள மை வைக்க முடியும். இந்த பேனா ஜனாதிபதி தேர்தலில் இருந்து பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Next Story