வேற்றுகிரகவாசிகள் நடமாட்டம் அச்சம் காரணமாக கிராம மக்கள் வீட்டில் முடக்கம்


வேற்றுகிரகவாசிகள் நடமாட்டம் அச்சம் காரணமாக கிராம மக்கள் வீட்டில் முடக்கம்
x
தினத்தந்தி 11 July 2017 2:53 PM IST (Updated: 11 July 2017 2:53 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில், உள்ளது அன்டுர் கிராமம் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் வேற்றுகிரகவாசிகள் அச்சம் காரணமாக பெண்களும், குழந்தைகளும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

குடகு

கர்நாடக மாநிலம் அன்டுர் கிராமத்தில்  ஒரு விவசாயப் பண்ணைக்கு அருகே திறந்தவெளியில், சுமார் 20-30 பெரிய கால் தடங்கள் இருந்ததைப் பார்த்த கிராமத்தினர் ஆச்சரியம் அடைந்தனர். இதுவரை இதுபோன்ற கால்தடத்தைப் பார்த்ததில்லை என்றும், எந்த விலங்கின் கால் தடத்தோடும் இது ஒத்துப்போகவில்லை என்றும் கூறினர். அது வேற்றுகிரகவாசிகளின் காலதடங்களாக இருக்கலாம் என அச்சம் அடைந்து உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில், ஏதோ ஒரு உயிரினம் மூச்சு விடுவது போன்ற மிகப் பயங்கர சத்தத்தைக் கேட்டதாகவும் சிலர் கூற, அந்த சமயத்தில் கிராமத்தில் இருந்த நாய்கள் குரைத்ததாகவும், பிறகு எல்லாமே ஒன்று போல அமைதியாக இருந்துவிட்டதாகவும் சிலர் தெரிவித்தனர்.

இது பற்றி செய்தி பரவியதால், பல சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் இந்த கால்தடங்களைப் பார்த்துச் செல்கின்றனர்.

கிராமத்தினரின் அச்சத்தைப் போக்க, அப்பகுதியில் வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம், இந்த கால்தடங்கள் எந்த உயிரினத்தின் கால்தடங்கள் என்பதை கணிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்

இதுபோன்ற பீதி பரவுவது இந்த குடகு மாவட்டத்தில் இது முதல் முறையல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு, கிராமத்தில் “நாளே பா” என்ற பீதி எழுந்தது. அப்போது மோகினி பேய் அச்சம் காரணமாக, ஏராளமான கிராமத்தினர் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கினர். பிறகுதான், அப்பகுதியில் மாபியாக்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதும், அவர்கள்தான் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க இதுபோன்ற பீதியைக் கிளப்பியதும் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story