அமர்நாத் பக்தர்கள் மீது தாக்குதல் எதிரொலி; புதுடெல்லியில் பலத்த பாதுகாப்பு


அமர்நாத் பக்தர்கள் மீது தாக்குதல் எதிரொலி; புதுடெல்லியில் பலத்த பாதுகாப்பு
x
தினத்தந்தி 11 July 2017 5:46 PM IST (Updated: 11 July 2017 5:46 PM IST)
t-max-icont-min-icon

அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் மீது தாக்குதல் நடந்த நிலையில் டெல்லியின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்திரைக்காக சென்ற பக்தர்களின் பேருந்து மீது நேற்று தீவிரவாத தாக்குதல் நடந்தது.  இதில் 6 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.  19 பேர் காயமடைந்தனர்.

இதனை அடுத்து டெல்லியின் சிறப்பு பிரிவு முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.  அதில், மக்கள் அதிகம் கூடும் சந்தைகள், கடைகள், மத தலங்கள், மெட்ரோ நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய மற்றும் தீவிரவாத தாக்குதல் ஆபத்து நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பினை அதிகரிக்கும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வடக்கு மற்றும் வடகிழக்கு டெல்லி பகுதிகளில் குறிப்பிடும்படியாக, கன்வார்கள் (சிவ பக்தர்கள்) யாத்திரை மேற்கொள்ளும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

தேசிய தலைநகர் புதுடெல்லி தீவிரவாதிகளின் தாக்குதல் இலக்கு பகுதியாக எப்பொழுதும் இருந்து வருகிறது.  அமர்நாத் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்தும் மற்றும் கன்வார் யாத்திரையை முன்னிட்டும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினம் வருவதனை கருத்தில் கொண்டும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


Next Story