ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி சொல்கிறார்
ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்து உள்ளார்
புதுடெல்லி,
ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் அமர்நாத் யாத்திரியை முடித்து திரும்பி வந்துகொண்டிருந்தவர்களின் பேருந்தை குறி வைத்து பயங்கரவாதிகள் நேற்று இரவு நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த சில வருடங்களில் நடைபெற்ற மோசமான தாக்குதல் இது ஆகும். அமர்நாத் புனித யாத்திரை மேற்கொண்ட யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
தாக்குதல் நடந்ததும் ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஆலோசிக்க அம்மாநில முதல் மந்திரி தலைமையில் அவசரமாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பயங்கரவாத தாக்குதலுக்கும் முதல் மந்திரி மெகபூபா முப்தி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்து உள்ளார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியதாவது: - “ முக்கியமான மாற்றத்தை கொண்டு வருவதற்கான நேரம் இதுவாகும். ஜம்மு காஷ்மீரில் மக்களாட்சி கலைக்கப்பட வேண்டும் அல்லது ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட வேண்டும். ஆளுநர் மூலம் மத்திய அரசின் ஆட்சியை ஜம்மு காஷ்மீரில் அமல்படுத்த வேண்டும்.
ராணுவ நடவடிக்கைக்கு நாம் தயாராக வேண்டும். ஏனெனில் வேறு அனைத்து தீர்வுகளும் பயனற்றது என்பது நிரூபனம் செய்யப்பட்டுள்ளது. ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரத்தின் கீழ் ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரும் கொண்டு வரப்படவேண்டும். சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ம் நீக்கப்பட வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story