கோவாவில் இருட்டறையில் 20 ஆண்டுகளாக நிர்வாண நிலையில் அடைத்து வைக்கபட்ட பெண் மீட்பு


கோவாவில் இருட்டறையில் 20 ஆண்டுகளாக நிர்வாண நிலையில் அடைத்து வைக்கபட்ட பெண் மீட்பு
x
தினத்தந்தி 12 July 2017 7:09 AM GMT (Updated: 12 July 2017 10:31 AM GMT)

கோவாவில் இருட்டறையில் 20 ஆண்டுகளாக நிர்வாண நிலையில் அடைத்து வைக்கபட்ட பெண்ணை போலீசார் மீட்டனர்.

 பனாஜி

கோவா மாநிலத்தின் கேண்டலிம் பகுதியில்  50 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் நிர்வாண நிலையில் ஒரு வீட்டின்  சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும்  தன்னார்வ நிறுவனர்கள் சிலர்   போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

 சம்பவ இடத்திற்கு சென்ற போலிசார் துர்நாற்றம் அடித்த  அந்த இடத்தில் இருந்து அந்த பெண்ணை மீட்டு உள்ளனர். அந்த பெண் அடைத்து வைக்கபட்டு இருந்த அறையில் மின்சாரம் இல்லை. அந்த பெண்ணின் சகோதரர் வீடு என அது கூறப்படுகிறது. கதவின் சிறிய துவாரம் வழியாக அந்த பெண்ணுக்கு உணவு அளிக்கபட்டு வந்து உள்ளது.

 போலீசாரால் மீடகப்பட்ட பெண்  மருத்துவபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். மீட்கபட்ட பெண்ணின் உறவினர்களிடம் போலீசார் அறிக்கைகள் பெறப்பட்டு உள்ளது.

கடந்த 20 வருடங்களாக இருட்டு மட்டுமே அவரது வாழ்க்கையாக இருந்துள்ளது.

கோவாவை சேர்ந்த இந்த பெண் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் மும்பையை சேர்ந்த நபரை திருமணம் செய்துகொண்டு மும்பைக்கு குடியேறினார்.

ஆனால், அந்த நபருக்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது என்பதை அறிந்து மீண்டும் கோவாவுக்கு திரும்பியுள்ளார்.

வீடு திரும்பிய இவரின் நடவடிக்கைகள் புதுவிதமாக இருந்துள்ளது, இதனால் இவரை இவரது குடும்பத்தினர் ஒரு அறையில் அடைத்து வைத்து ஜன்னலின் வழியாக உணவுகளை மட்டும் வழங்கி வந்துள்ளனர். என கூறப்படுகிறது


Next Story