தீவிரவாத தாக்குதல் எதிர்ப்பு ஒருவரும் காஷ்மீர் கலாசாரத்தினை கொல்ல முடியாது என நிரூபித்துள்ளது

காஷ்மீர் மக்களின் அமர்நாத் தீவிரவாத தாக்குதல் எதிர்ப்பு ஆனது காஷ்மீர் கலாசாரத்தினை ஒருவரும் கொல்ல முடியாது என நிரூபித்துள்ளது என்று முதல் மந்திரி முப்தி இன்று கூறியுள்ளார்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்திரைக்காக சென்று விட்டு திரும்பிய பக்தர்களின் பேருந்து மீது நேற்று முன்தினம் இரவு தீவிரவாத தாக்குதல் நடந்தது. இதில் 6 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில முதல் மந்திரி மெஹபூபா முப்தி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, அமர்நாத் பக்தர்கள் மீது நடந்த தாக்குதல் நமது சகோதரர்கள் மற்றும் காஷ்மீரி மக்கள் மீது நடந்த தாக்குதல். இதற்கு காஷ்மீர் பற்றிய பல்வேறு கருத்துகளை கொண்ட மக்களனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, ஒவ்வொருவரும் பேராட்டங்களில் ஈடுபட்ட விதம், சிலர் காஷ்மீரிகளை கொல்ல முயற்சிக்கலாம். ஆனால் காஷ்மீர் கலாசாரத்தினை கொல்ல முடியாது என நிரூபித்துள்ளது என கூறியுள்ளார்.
தங்களது மத வழிபடுதல்களை நிறைவேற்றி கொள்வதற்கு வந்த ஒன்றுமறியாத பக்தர்கள் மீது நடந்த தாக்குதல் பற்றி விவரிக்க வார்த்தைகள் இல்லை. பல வருடங்களுக்கு பின்னரும் காஷ்மீரில் உள்ள ஒவ்வொருவரும் அதே நிலையிலேயே உள்ளனர். காஷ்மீர் இப்படி இருக்க கூடாது என்பது நம் அனைவரது நம்பிக்கையாக உள்ளது.
நாட்டில் இன வன்முறைகள் மற்றும் மக்களை ஒருவருக்கு எதிராக ஒருவர் சண்டை போட்டு கொள்ள தூண்டுவதனை இலக்காக கொண்டுள்ளனர் தாக்குதல்காரர்கள். பொறுமையுடன் இருக்கும் நாட்டு மக்களை நான் வணங்குகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.