ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்கு மத்திய அரசு கணித பயிற்றுநரை தேடி வருகிறது-ராகுல் காந்தி கிண்டல்


ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்கு மத்திய அரசு  கணித பயிற்றுநரை தேடி வருகிறது-ராகுல் காந்தி கிண்டல்
x
தினத்தந்தி 13 July 2017 3:32 PM GMT (Updated: 13 July 2017 3:32 PM GMT)

பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்கு மத்திய அரசு கணித பயிற்றுநரை தேடி வருகிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் செல்லாத ரூ.500 ரூ1,000 நோட்டுக்கள் எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி தொடர்ந்து 24 மணி நேரமும் நடந்து வருகிறது என ரிசர்வ் வங்கி கவர்னர்  உர்ஜித் படேல் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்கு மத்திய அரசு கணித பயிற்றுநரை தேடி வருகிறது. தயவு செய்து பிரதமரின் அப்ளிகேஷனில் சென்று கணித  பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பியுங்கள்.   200 நாட்களை கடந்தும் பழைய நோட்டுகள் ரூ.3 லட்சம் கோடி இன்னமும் ஏன் எண்ணப்படவில்லை? ரிசர்வ் வங்கி பழைய ரூபாய் நோட்டுகளை  தொடர்ந்து எண்ணி வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story