காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு


காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 16 July 2017 2:51 PM IST (Updated: 16 July 2017 2:51 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்துக்குள் சிக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்.


ஸ்ரீநகர்,

காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்தில் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அமர்நாத் யாத்ரீகர்கள் பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்துக்குள் சிக்கியது. விபத்தில் 11 பக்தர்கள் உயிரிழந்தனர். 35-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர். விபத்து நேரிட்ட பகுதிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறார்கள் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story