பேருந்து விபத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல்


பேருந்து விபத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 16 July 2017 4:32 PM IST (Updated: 16 July 2017 4:32 PM IST)
t-max-icont-min-icon

அமர்நாத் யாத்ரீகர்கள் பேருந்து விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்நாத் யாத்ரீகர்களை சுமந்து சென்ற பேருந்து ஒன்று பள்ளத்திற்குள் விழுந்தது.

இந்த விபத்தில் உயிரிழந்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.  35க்கும் கூடுதலானோர் காயமடைந்து உள்ளனர்.

அமர்நாத் பக்தர்கள் உயிரிழந்த விசயத்தினை அறிந்து அதிக வேதனை அடைந்துள்ளேன் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்றும் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.


Next Story