செஸ் வரி அதிகரிப்பு: நள்ளிரவு முதல் நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்கிறது
செஸ் வரி அதிகரிக்கப்பட்டதால் நள்ளிரவு முதல் நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்கிறது.
புதுடெல்லி,
டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் வணிகவரித்துறை செயலர் காணொலிக்காட்சி மூலம் இதில் பங்கேற்றார்.
ஜி.எஸ்.டி. அமல்படுத்திய பிறகு ஏற்பட்டுள்ள வரி சிக்கல்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சிகரெட்டின் அளவை பொறுத்து விதிக்கப்படும் கூடுதல் வரி விதிப்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஆலோசனைக்கு பிறகு சிகரெட் மீதான கூடுதல் வரி (செஸ்) விதிப்பை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று நள்ளிரவு முதல் சிகரெட் விலை உயருகிறது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:- ‘ சிகரெட் மீதான வரி 28 சதவீதம் உயர்த்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகரெட் விலை நள்ளிரவு முதல் உயர்த்தப்படுகிறது. இந்த வரி உயர்வால் அரசுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் ஜி.எஸ்.டி.ஆய்வு கூட்டம் வரும் ஆகஸ்ட் முதல் வராத்தில் கூடும்” என்றார்.
Related Tags :
Next Story