துணை ஜனாதிபதி தேர்தல்: வெங்கையாநாயுடுவுக்கு ஓபிஎஸ் ஆதரவு


துணை ஜனாதிபதி தேர்தல்: வெங்கையாநாயுடுவுக்கு ஓபிஎஸ் ஆதரவு
x
தினத்தந்தி 17 July 2017 9:43 PM IST (Updated: 17 July 2017 9:56 PM IST)
t-max-icont-min-icon

துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வெங்கையாநாயுடுவுக்கு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,


துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 5–ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எதிர் கட்சிகள் சார்பில் கோபால் கிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார். ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் வெங்கையா நாயுடுவும் போட்டியிடுகின்றனர். பாஜக சார்பில்  துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள வெங்கையா நாயுடுவுக்கு அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி ஆதரவு தெரிவிப்பதாக முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆதரவு கேட்டதை அடுத்து, அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி தங்கள் ஆதரவை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story