வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற 1,000 தொண்டு நிறுவனங்களுக்கு தடை


வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற 1,000 தொண்டு நிறுவனங்களுக்கு தடை
x
தினத்தந்தி 19 July 2017 2:45 AM IST (Updated: 19 July 2017 1:55 AM IST)
t-max-icont-min-icon

அன்னிய பங்களிப்பு கட்டுப்பாட்டு சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 1,000 தொண்டு நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கின்றன.

புதுடெல்லி, 

பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி கிரண் ரிஜிஜு நேற்று பேசும்போது கூறியதாவது:-

வெளிநாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய தொண்டு நிறுவனங்கள் நன்கொடை திரட்டியது குறித்து ஆய்வு செய்வதற்காக அவற்றின் தற்போதைய வங்கி கணக்குகளை தாக்கல் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. நன்கொடை பெறும் இந்த தொண்டு நிறுவனங்கள் அன்னிய பங்களிப்பு கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் பதிவு செய்து இருந்தால் மட்டுமே அவைகளால் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற முடியும்.

இந்த சட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் இருந்து எந்த தொண்டு நிறுவனமாவது பணப் பரிமாற்றம் செய்து கொண்டிருந்தால் இருந்தால் அதுபற்றி 48 மணி நேரத்தில் மத்திய அரசுக்கு தெரிவிக்கும்படியும் வங்கிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்த பெற்ற நிதியை தவறாகவும், அன்னிய பங்களிப்பு கட்டுப்பாட்டு சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும் 1,000 தொண்டு நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவை கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றின் அன்னிய பங்களிப்பு தொடர்பான வங்கிக்கணக்குகளின் இயக்கத்திற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story