அமர்நாத் புனித யாத்திரை: இயற்கை மரணம், பயங்கரவாதிகள் தாக்குதல்,சாலை விபத்து 49 பேர் உயிரிழப்பு
அமர்நாத் புனித யாத்திரையின் போது இயற்கை மரணம், பயங்கரவாதிகள் தாக்குதல் சாலை விபத்து என உயிரிழந்தவர்கள் 49 பேர் என்பது தெரியவந்துள்ளது.
புதுடெல்லி,
ஸ்ரீ அமர்நாத் புனித வாரியத்தின் தலைவர் என்.என் வோரா செய்தியார்களிடம் கூறுகையில்,
அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி தொடங்கியது. 48 நாட்கள் நடக்கும் அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு 40 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி (ரக்ஷா பந்தன்) யாத்திரை முடிவுக்கு வருகிறது. இந்த புனித யாத்திரையின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 என தெரியவந்துள்ளது.
அமர்நாத் யாத்திரையின் போது இயற்கையாக மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆகவும், கடந்த 10-ம்தேதி யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்கள், மற்றும் சாலை விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 29 ஆக ஆக மொத்தம் 49 என தெரியவந்துள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாத்ரீகர்கள் அழைத்து செல்வதற்கு போக்குவரத்து செலவு ரூ. 14.66 லட்சம் ஆகி உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Related Tags :
Next Story