இந்திய துணை தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்: இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு
எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் குற்றம் சாட்டியுள்ள பாகிஸ்தான் இது தொடர்பாக இந்திய துணைத்தூதரை நேரில் அழைத்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இஸ்லமாபாத்,
பாகிஸ்தான் எல்லையில் இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தியுள்ள பாகிஸ்தான், அந்நாட்டுக்கான இந்திய தூதர் ஜேபி சிங்கை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் ராணுவ வாகனம் மீது இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும் இதில் நிலைதடுமாறிய ராணுவ வாகனம் நீலம் நதியில் மூழ்கியதில் 4 ராணுவ வீரர்கள் பலியானதாகவும் பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ஜியோ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக இந்திய துணைத்தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு மாதத்தில் மட்டும் இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியிருப்பது இது மூன்றாவது தடவையாகும். எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டி இந்திய துணைத்தூதருக்கு கடந்த 8,9 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர்.
Related Tags :
Next Story