நாட்டில் 2016-ம் ஆண்டு 11,400 விவசாயிகள் தற்கொலை என மத்திய அரசு தகவல்


நாட்டில் 2016-ம் ஆண்டு 11,400 விவசாயிகள் தற்கொலை என மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 20 July 2017 4:50 PM IST (Updated: 20 July 2017 4:50 PM IST)
t-max-icont-min-icon

நாட்டில் 2016-ம் ஆண்டு மட்டும் 11,400 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டு உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.



புதுடெல்லி,


 2016-ம் ஆண்டுக்கான தேசிய குற்றப்பதிவு ஆணைய தரவுகள் வெளியிட உள்ளது. ஆணைய தரவுகள் 11,400 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டு உள்ளனர் என தெரிவிக்கிறது. 2015-ம் ஆண்டு 12,602 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டு உள்ளனர் என பாராளுமன்றத்தில் மத்திய விவசாயத் துறை மந்திரி ராதாமோகன் சிங் கூறிஉள்ளார். விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியை ஏற்படுத்தின. இப்பிரச்சனை இன்று எழுப்பட்டது. விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பாக பேசிய ராதாமோகன் சிங் மேற்கண்ட தகவலை தெரிவித்து உள்ளார். 

விவசாயிகளின் தற்கொலையை அவர்களுடைய வருமானத்தை உயர்த்துவதன் மூலம்தான் தடுக்க முடியும், விவசாயத்துறைக்கு பட்ஜெட் ஒதுக்கீட்டை உயர்த்துவது உள்பட அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்றார் ராதாமோகன் சிங்.

காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில் விவசாயிகள் விளைப்பொருட்களுக்கு லாபகரமான விலையை பெறுவதை உறுதிசெய்வதில் அரசு தோல்வி அடைந்துவிட்டது என விமர்சனம் செய்தார். மத்திரி ராதாமோகன் சிங் பதிலளித்து பேசுகையில், 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாரதீய ஜனதா விவசாய விளைப்பொருட்களுக்கு உற்பத்தி செய்ய ஆகும் செலவில் இருந்து கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்படும் விதமாக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும் என வாக்குறுதி அளித்தது.

விவசாய விலைப்பொருட்கள் காப்பீடு திட்டம் மூலம் ரூ. 3,560 கோடி பிரீமியம் வழங்கப்பட்டு உள்ளது, விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை ரூ. 3,548 கோடி வழங்கப்பட்டு உள்ளது என்றார். 

விவசாய பொருட்களுக்கு காப்பீடு திட்டம் மூலம் தனியார் நிறுவனங்கள் பயன்படுகிறது என்ற குற்றச்சாட்டு பதிலளித்து பேசிய ராதா மோகன் சிங், இப்பிரச்சனையை தீர்க்க இடமளிக்கும் திட்டத்தை பயன்படுத்தி வருகிறோம். விவசாய விளைப்பொருட்கள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என மாநிலங்களுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. மாநில அரசுக்களால் ஒப்பந்தம் வழங்க முடியும், மாநில அரசுக்கள் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பயன்கள் செல்ல வேண்டாம் என்றால் மாநில அரசுக்களே சொந்த நிறுவனத்தை உருவாக்க முடியும். குஜராத் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்கள் இதுபோன்ற திட்டங்களை தொடங்க உள்ளது என்றார். 

தனியார் கடன் கொடுப்பவர்களிடம் இருந்து விவசாயிகளை காப்பாற்ற அரசு ரூ. 10 லட்சம் கோடியை விவசாய கடனுக்கு இவ்வாண்டு ஒதுக்கிஉள்ளது என கூறிஉள்ளார் ராதா மோகன் சிங். விவசாய நலன்களை காக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து உள்ளதாக, அதனை பட்டியலிட்டார். 


Next Story