அண்டை நாடுகளுடனான உறவில் இந்தியா அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் - முன்னாள் உயரதிகாரி
முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனன் இந்தியா தன் அண்டை நாடுகளுடனான உறவில் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
புதுடெல்லி
சிவ சங்கர் மேனன் முன்னாள் வெளியுறவுத் துறை செயலரும் ஆவார். வெளிநாட்டு செய்தியாளர்களுக்கான இந்திய அமைப்பு ஒன்றில் பேசும்போது அவர், “ நமது அண்டை நாடுகளுடனான உறவில் அணுகுமுறை மாற்றங்கள் தேவை. உங்களது அண்டை நாடுகள் உங்களது அண்டை நாடுகள் மட்டுமல்ல. அவர்கள் மற்றவர்களுக்கும் அண்டை நாடுகள். இன்றைய உலகம் உலகளவிலான நோக்கங்களைக் கொண்ட உலகமாக இருக்கிறது” என்றார் அவர்.
ஸ்ரீலங்கா கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்த அணுகியபோது இந்தியா நீண்ட காலம் பதில் ஏதும் சொல்லாமல் இருந்தது பெரிய தவறாகிவிட்டது. சீனா அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு விட்டது. இதில் முக்கியமான விஷயம் இந்தியாவின் 83 சதவீத அந்நிய வர்த்தகம் கொழும்பு துறைமுகம் மூலமாகவே நடைபெறுகிறது என்பதேயாகும் என்றார் சிவ சங்கர் மேனன். இதே போல சானாஹார் துறைமுகத்தை மேம்படுத்த காலதாமதம் செய்வது இந்தியாவின் நலன்களுக்கு சாதகமானது இல்லை என்றார் அவர். இந்திய இன்னும் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த அணுகுமுறையையே கொண்டுள்ளது. ஆனால் உலகம் மாறிவிட்டது. உலகத்தார் வித்தியாசமாக செயல்படுகின்றனர் என்றார் அவர்.
Related Tags :
Next Story